College News in Media

 
30.01.2026

Dhinamani                                                                           Date:02.02.2026

            
                                                                        Date:01.02.2026  

                            

Dhinamani:                                                         Date:01.02.2026  



 

The Hindhu Tamil                                                                                    Date:31.01.2026

கோவில்பட்டி கல்லூரியில் வடிவமைப்பு சிந்தனை கருத்தரங்கு

January 29, 2026

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் “தொழில்முனைவோர் புதுமைகளை இயக்குதல்: வடிவமைப்பு சிந்தனை & தொடக்க வணிக மாதிரிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. தொழில் துறை தொடர்பு மைய ஒருங்கிணைப்பாளரும், வர்த்தகத் துறை உதவிப் பேராசிரியருமான  மா. வைரவன் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் தலைமை உரையை கல்லூரி முதல்வர். மூ.சுப்புலெட்சுமி வழங்கி, மாணவர்கள் புதிய யோசனைகள், வடிவமைப்பு சிந்தனை மற்றும் தொடக்க தொழில் மாதிரிகள் குறித்து ஆழ்ந்த புரிதலை பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.

சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர்  பா.மகேஷ்குமார் மற்றும் உள் தர உறுதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர். ரா. வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, தொழில் முனைவு கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

முதன்மை விருந்தினரை வர்த்தகத் துறை, துறைத்தலைவர் செ. பழனிக்குமார் அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மேல்மருவத்தூரில் அமைந்துள்ள லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கோ. ராஜசேகர் கலந்து கொண்டு உதவிப் பேராசிரியர் “தொழில் முனைவோருக்கான வடிவமைப்பு சிந்தனை” மற்றும் “தொடக்க வணிக மாதிரி புதுமை” என்ற தலைப்பில், முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்

மற்றும் மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியரும், தொழில் துறை தொடர்பு மைய உறுப்பினருமான எம். மாரிச்சாமி நன்றி கூறினார்.

“நிமிர்ந்து நில்” ஹேக்கத்தான்”

27.01.2026

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் தமிழ்நாடு அரசின் “நிமிர்ந்து நில்” ஹேக்கத்தான் நிகழ்விற்கு மாணவர்களை தயார் படுத்தும் வகையிலான நிகழ்ச்சி நடைபெற்றது. வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளரும், வணிக பகுப்பாய்வு துறைத்தலைவருமான பா. கிருபாகரன் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் தலைமை உரையை கல்லூரி முதல்வர் மூ. சுப்புலெட்சுமி வழங்கி, மாணவர்கள் தொழில்முனைவு சிந்தனையுடன் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார். சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கி, புதுமை மற்றும் ஆராய்ச்சித் திறன்கள் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக என்ஸ்குயர் ஹெர்பல்ஸ் நிறுவனர் சத்தியபாமா நாச்சியார் (வடக்கன்குளம்) கலந்து கொண்டு, தனது தொழில்முனைவு அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு, யோசனை உருவாக்கம் மற்றும் தொழில் தொடக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். முடிவில் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் சு. பிரவீன் குமார் நன்றியுரை வழங்கினார்.

Date:29.01.2026                                                                    Media: https://tn96news.com/?p=43056



                 Date:28.01.2026                                                        Makkal velicham: pg .no : 6

   கோவில்பட்டியில் குடியரசு தின கொண்டாட்டம்

January 26, 2026

கோவில்பட்டியில் குடியரசு தின கொண்டாட்டம்

நாட்டின் 77 வது குடியரசு தினம் இன்று ஜனவரி 26 கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்  கோவில்பட்டியில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள்,தனியார் தொண்டு நிறுவனங்கள் குடியிருப்போர் நலசங்கத்தினர் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் தேசிய கொடியேற்றி குடியரசு   தினம் கொண்டாடினார்கள்.

கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் 77வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கணிதவியல் துறையின் மூத்த இணைப்  பேராசிரியர் எ.சுசிலா தேசியக் கொடியை ஏற்றினார்.

கல்லூரியின் தேசிய மாணவர் அணி வகுப்பு மரியாதையைத் தொடர்ந்து கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் குடியரசு தினவிழா உரையாற்றினார். மேலும் கல்லூரி முதல்வர்(பொ) மூ.சுப்புலெட்சுமி, இயக்குநர் (பொ) பா.மகேஷ்குமார் ஆகியோர் “மொழித்திறன் மேம்பாட்டு அமைப்பின்” சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரால் “தேசிய கல்வி அறிவுக்குழுவின் சிறந்த ஒருங்கிணைப்பாளர்” என்ற பாராட்டுச் சான்றினைப் பெற்ற இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் க.அங்குமலர் ,சிறந்த தூதுவர் சான்றினைப் பெற்ற மாணவர்களை கவுரவித்தனர்.

விழா ஏற்பாட்டினை உடற்கல்வி இயக்குநர் தி.கோதையம்மாள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தார்கள்.   

                                                                        MEDIA:  https://tn96news.com/?p=42966


கோவில்பட்டி கல்லூரியில் தேசிய `ஸ்டார்ட்அப் தின’ கருத்தரங்கம்

January 20, 2026

கோவில்பட்டி கல்லூரியில் தேசிய `ஸ்டார்ட்அப் தின’ கருத்தரங்கம்

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி), மின்னணுவியல் துறை மற்றும் நிறுவன புதுமை கவுன்சில் இணைந்து தேசிய ஸ்டார்ட்அப் தின விழாவை கல்லூரி அரங்கில் நடத்தின.

 “ஸ்டார்ட்அப் என்பது ஒரு நிறுவனம் மட்டுமல்ல, அது ஒரு மனப்பாங்கு” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் மூலம் மாணவர்களிடையே தொழில் முனைவோர் சிந்தனையும் புதுமை மனப்பாங்கும் வளர்ப்பதே நோக்கமாகக் கொள்ளப்பட்டது.

    மின்னணுவியல் துறை உதவிப் பேராசிரியரும் நிறுவன புதுமை கவுன்சில் ஒருங்கிணைப்பாளருமான. ஹ. ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி தலைமையுரையாற்றி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஸ்டார்ட்அப்களின் பங்கு குறித்து விளக்கி, மாணவர்கள் சுயதொழில் முனைவில் ஈடுபட வேண்டும் என ஊக்குவித்தார்.

    சுயநிதிப்பாடப்பிரிவுகளின் இயக்குநர் மு பா. மகேஷ் குமார் பாராட்டுரையில்;, கல்வி நிறுவனங்கள் தொழில் முனைவோரை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என குறிப்பிட்டார்.

    முதன்மை விருந்தினரை ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறையின், உதவிப் பேராசிரியர் எஸ். கோபிகா, அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக ஜெ. சிவதாசன், சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை இணைப் பேராசிரியர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அவர் ஸ்டார்ட்அப் கலாச்சாரம், புதுமை சிந்தனை மற்றும் வெற்றிக்குத் தேவையான மனப்பாங்கு குறித்து மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியின் இறுதியில் மின்னணுவியல் துறை உதவிப் பேராசிரியர் வீ.சிவராமசுப்பு நன்றி கூறினார்.

                                                                                                MEDIA:https://tn96news.com/?p=42828

மக்கள் வெளிச்சம்  நாளிதழ்ச் செய்தி, பக்.8




22.01.2026 தினமணி நாளிதழ்ச் செய்தி ப.2



தமிழ்முரசு நாளிதழ்ச் செய்தி 23.01.2026




DATE:12/01/2026                                                                                            MEDIA: TN 96 NEWS


                                                            தின மணி பக்கம் எண்.2

                                                                            12/01/2026


12/01/2026
Dhinakaran - page no:13

போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு

08.01.2026

    DATE:08.1.2026                                                                 MEDIA: https://tn96news.com/?p=42590


கோவில்பட்டி கல்லூரியில் தொழில்முறை மனப்பான்மை கருத்தரங்கு     
07.01.2026

                                                                                                MEDIA:https://tn96news.com/?p=42581
07.01.2026

          08.01.2026                                                                   இந்து தமிழ் திசை ( பக்கம் எண்.4)


DATE:09.01.2026                                                                        MEDIA: DHINAKARAN


கோவில்பட்டி கல்லூரியில் 521 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி

08.01.2026   

DATE:09.01.2026                                                              MEDIA:https://tn96news.com/?p=42605


DATE:09.01.2026                                                                   MEDIA:DHINAMANI( P.NO;4)

கல்லூரி மாணவர்களுக்கான திறன் சார்ந்த போட்டிகள்

TALENTFEST -2025
24/12/2025

DATE:10/01/2026                                                            MEDIA:https://tn96news.com/?p=42629



DATE: 05/01/2026                                                                            தி ஹிந்து தமிழ் ( பக்கம் -4)

கோவில்பட்டி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை     

03.01.2026 


DATE:03.01.2026                                                                 MEDIA; https://tn96news.com/?p=42482

தெருநாய்களுக்கான மனிதாபிமான தீர்வுகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

02.01.2026


DATE:02.01.2026                                            MEDIA:https://tn96news.com/?p=42470


DATE:03.01.2026                                                                   MEDIA: MAKKALVELICHAM

பயிற்சிப்பட்டறை மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம்   


DATE: 01.01.2026                                                                        MEDIA:DHINAMANI 

                                                                                                                    P.NO:4

கோவில்பட்டி கல்லூரியில் ‘பிராண சிகிச்சை’ விழிப்புணர்வு, துறைகளுக்கு இடையேயான திறன்சார்ந்த போட்டிகள்  

29.12.2025   


DATE : 01.01.2026                                                             MEDIA:https://tn96news.com/?p=42423

  

  DATE:30.12.2025                                                                                   MEDIA: THE HINDU TAMIL 




தேசிய நுகர்வோர் உரிமைகள் தின விழா

    31.12.2025                                                                                                  MEDIA :  DHINAMANI

   `இணையமும் இன் தமிழும்’ கருத்தரங்கம்

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு தன்னாட்சிக் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பாக காலை 10 மணி அளவில் இணையமும் இன் தமிழும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ் துறைத் தலைவர். சா. தங்க மாரியப்பன் வரவேற்று பேசினார். சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குனர் பா. மகேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார். உதவிப் பேராசிரியர் மு. கார்த்திக் ராஜா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

அருப்புக்கோட்டை சைவ பானு சத்திரிய கல்லூரியின் தமிழ் துறைத்தலைவர் இரா. தன சுபா  “இணையமும் இன் தமிழும்” என்ற தலைப்பில்  இன்றைய மாணவர்களுக்கு இணையத்தில் பயன்படுத்தக்கூடிய தமிழ் சார்ந்த மென் பொருட்களை பற்றியும் அதனுடைய பயன் பாடுகளை பற்றியும் எடுத்துரைத்தார்.

கருத்தங்க முடிவில்  தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர். சு அனுசுயா தேவி நன்றி கூறினார்.

 December 23, 2025                                                       MEDIA:  https://tn96news.com/?p=42236

   நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

December 18, 2025


நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி நுகர்வோர் மன்றம், நாட்டு நலப்பணித்திட்டம்  மற்றும் வணிகவியல் துறை இணைந்து நுகர்வோர் வார விழாவை முன்னிட்டு நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தியது.

கல்லூரிச் செயலர். ப.மகேந்திரன், முதல்வர். மூ.சுப்புலெட்சுமி, ஆகியோரின் வழிகாட்டுதலின்படி 18.12.2025 அன்று அய்யனேரி கிராமத்தில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மேலும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் ஊர்ப்பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பேரணியில் 180 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

அய்யனேரி ஊராட்சி மன்றத் தலைவர், மாணவ மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கி சிறப்பித்தார்.  இதற்கான ஏற்பாடுகளை  துறைத்தலைவர் ஆ.ரேவதி, நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் செ.வினாயஸ்ரீ, நாட்டு நலப்பணித்திட்டம் ஒருங்கிணைப்பாளர் ரேணுகா தேவி மற்றும் உதவி பேராசிரியர் ப.தர்ஷினி லட்சுமி ஆகியோர்  செய்து இருந்தனர்

                                                                                        MEDIA: https://tn96news.com/?p=42107

                        

No comments:

Post a Comment

A Review of Girish Karnad's Nagamandala

 31.01.2026 Book Title: Nagamandala Author: Girish Karnad Reviewer: M.A. English Literature – I Year Student As part of the library in...